Topic : Holy Spirit

நீங்கள் நம்பிக்கையிலும், இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையிலும், பெருகும்படிக்கு நம்பிக்கையின் தெய் வம் விசுவசிப்பதினாலுண்டாகும் எவ் வித சந்தோஷத்தினாலும் உங்களை நிரப்புவாராக.

Romans 15:13

ஆண்டவரோ இஸ்பிரீத்துவாயிருக்கிறார்; ஆண்டவருடைய இஸ்பிரீத்து எங்கே உண்டோ, அங்கே சுயாதீனமுமுண்டு. (அரு. 4:24.)

2 Corinthians 3:17

உங்கள் சரீரம், உங்களிடத்திலிருக்கிறவரும், சர்வேசுரனிடத்தில் நீங்கள் பெற்றுக்கொண்டவருமாகிய இஸ்பிரீத்துசாந்துவின் ஆலயமென்றும், நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல வென்றும் அறியீர்களோ? (1 கொரி. 3:17; 2 கொரி. 6:16, 17.)
உயர்ந்த கிரயத்துக்கு கொள்ளப்பட்டிருக்கிறீர்களே. ஆகையால் சர்வேசுரனை உங்கள் சரீரத்தில் கொண்டிருந்து, மகிமைப்படுத்துங்கள். (1 கொரி. 7:23; பிலிப். 1:20.)

1 Corinthians 6:19-20

ஆகையால் நீங்கள் போய், சகல ஜாதி ஜனங்களுக்கும் உபதேசித்து: பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத் தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, (மாற். 16:15.)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அனுசரிக்கும்படி அவர்களுக்குப் போதியுங்கள். இதோ நான் உலகமுடியுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேனென்று திருவுளம்பற்றினார். * 20. அப்போஸ்தலர்கள் மரிப்பார்களென்று சேசுநாதர் அறிந்திருந்தும், உலக முடியுமட்டும் அவர்களோடுகூடத் தாமிருக்கிறதாகச் சொல்லுகிறபடியால், அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப்பின், அவர்களுடைய ஸ்தானத்திலே இருக்கிறவர்களோடும் சேசுநாதர் சுவாமி வசிக்கிறாரென்று சொல்லவேண்டியது. அப்போஸ்தலர்களுடைய ஸ்தானங்களும் உலகமுடியுமட்டும் நிலைநிற்குமென்று நிச்சயமாயிருக்கிறது.

Matthew 28:19-20

இராயப்பர் அவர்களை நோக்கி : நீங்கள் தவஞ்செய்து, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் சேசுக்கிறீஸ்துநாதரு டைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவான்; அப்பொழுது இஸ்பி ரீத்துசாந்துவின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Acts 2:38

நம்பிக்கையோவென்றால் நம்மை வெட்கிப்போகப்பண்ணாது. ஏனெனில் நமக்கு அளிக்கப்பட்ட இஸ்பிரீத்து சாந்துவினாலே தேவசிநேகம் நம் முடைய இருதயங்களில் எப்பக்கத் திலும் பொழியப்பட்டிருக்கிறது.

Romans 5:5

ஆனால் நீங்கள் தீயோராயினும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கொடைகளைக் கொடுக்க அறிந்தி ருக்கும்போது, உங்கள் பரம பிதாவானவர் தம்மை வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நல்ல இஸ்பிரீத்துவைத் தந்தருளுவார் என்று திருவுளம்பற்றினார்.

Luke 11:13

நானும் பிதாவை மன்றாடுவேன்; அவர் என்றென்றைக்கும் உங்களோடுகூட வசிக்கும்படியாகத் தேற்றுகிறவராகிய வேறொருவரை உங்களுக்குத் தந்தருளுவார். (லூக். 24:49.) * 16. தேற்றுகிறவர் இஸ்பிரீத்துசாந்துவானவர்தாமே. தேற்றுகிறவரென்று இஸ்பிரீத்து சாந்துவைப்பற்றி வேதாகமங்களில் அடிக்கடி சொல்லியிருக்கக் காண்கிறோம். இவ் வாக்கியத்தினால் இஸ்பிரீத்துசாந்துவானவர் அப்போஸ்தலர்களோடு மாத்திரமல்ல, அவர்களிடமாய்ச் சத்திய வேதத்தைப் போதிக்க அதிகாரம் பெற்றவர்களோடும் உலகம் முடியுமட்டும் இருப்பாரென்று விளங்குகிறது.

John 14:16

ஆனால் உங்கள்மேல் எழுந்தருளி வரப்போகிற இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையை நீங்கள் அடைந்து, ஜெருசலேமிலும், யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைசி மட்டும் எனக்குச் சாட்சிகளாயிருப் பீர்கள் என்றார். (அப். 2:2; லூக். 24:48.)

Acts 1:8

அல்லாமலும், அக்கினிமயம் போன்ற பிரிந்த நாவுகள் அவர்களுக்குத் தோன்றி, அவர்களில் ஒவ்வொருவர் மேலும் வந்து தங்கினது.
அவர்கள் எல்லாரும் இஸ்பிரீத்துசாந்துவினால் நிரப்பப்பட்டு, பேசும் படிக்கு இஸ்பிரீத்துசாந்துவானவர் அவர் களுக்குக் கொடுத்த வரத்தின்படியே பற்பல பாஷைகளில் பேசத் தொடங்கி னார்கள். (மத். 3:11; அப். 11:16; 1 கொரி. 12:10; அரு. 7:39.)

Acts 2:3-4

ஆனால் என் நாமத்தினாலே பிதாவானவர் அனுப்பப்போகிற தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவானவர் சகலத்தையும் உங்களுக்குப் படிப்பித்து, நான் உங்ளுக்குச் சொன்ன யாவற்றை யும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

John 14:26

நாங்களும், சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிகிற சகலருக்கும் அவர் தந் தருளின இஸ்பிரீத்துசாந்துவானவரும், இந்தச் சங்கதிகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் என்றார்கள்.

Acts 5:32

உங்களைக் கொண்டு போய்க் கையளிக்கும்போது, என்ன பேசுவோ மென்று முன்னதாக யோசியாதிருங் கள். அந்நேரத்தில் உங்களுக்கு அருளப் படுவது எதுவோ, அதையே பேசுங்கள். ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, இஸ்பிரீத்துசாந்துவானவரே பேசுகிறவர். (மத். 10:19; லூக். 12:11, 12; 21:14, 15.)

Mark 13:11

நீங்களோ மிகவும் பிரியமுள்ளவர்களே, உங்கள் மகா பரிசுத்த விசுவாசத்தின்மேல் உங்களை மாளிகை யாக எழுப்பி, இஸ்பிரீத்துசாந்துவில் ஜெபித்து,
உங்களைத் தேவசிநேகத்தில் காப்பாற்றி, நித்திய ஜீவியத்துக்கேதுவான தமது இரக்கத்தை நமது கர்த்தராகிய சேசுக்கிறீஸ்துநாதர் அளிக்கும்படி எதிர்பார்த்திருங்கள்.

Jude 1:20-21

ஏனெனில், தீர்க்கதரிசனமானது எக்காலத்திலாவது மனுஷருடைய மனதினால் உண்டானதல்ல. சர்வே சுரனுடைய பரிசுத்த மனுஷர்கள் இஸ்பிரீத்துசாந்துவினால் ஏவப்பட்டுப் பேசினார்கள். *** 20-21. கிறீஸ்துவர்கள் பரலோக மகிமைப்பிரதாப ஒளியில் சேருந்தனையும் இவ்வுலக அந்தகாரத்தில் நடக்கிறதினாலே, எப்போதும் தேவ வாக்கியத்தைத் திருவிளக்காகக் கையிலேந்தி அதின் ஒளியில் நடக்கவேண்டுமென்று அர்ச். இராயப்பர் படிப்பிக்கிறார். இத்தோடு இன்னொரு விசேஷத்தையும் கவனிக்கவேண்டுமென்று அவர் படிப்பிக்கிறார். என்னவெனில்: பரிசுத்த தீர்க்கதரிசிகள் தங்கள் சுயமனதாய் ஒருபோதும் பேசாமல், இஸ்பிரீத்துசாந்துவானவர் தங்களுக்கு ஏவினபடியே பேசின படியால் அந்த ஏவலின்படி அவர்கள் பேசினவைகளுக்கும், எழுதினவைகளுக்கும், எவனும் தன் சுயமனதின்படி அர்த்தமாவது வியாக்கியானமாவது செய்யலாகாதென்று கட்டளையிடுகிறார். இஸ்பிரீத்துசாந்துவினால் நடத்தப்படுகிற சத்திய திருச்சபை மாத்திரம் அவைகளுக்கு மெய்யான அர்த்தத்தையும் வியாக்கியானத்தையுஞ் சொல்லக்கூடும். இதனிமித்திம் உரோமான் கத்தோலிக்கு திருச்சபையிலுள்ள வேதபாரகரெல்லாரும் வேதவாக்கியங்களுக்கு வியாக்கியானஞ் செய்யும்போது, தங்கள் இஷ்டப்படி செய்யாமல், திருச்சபையின் படிப்பினையையும் நோக்கத்தையுமுன்னிட்டு வியாக்கியானம் செய்கிறார்கள். அன்றியும் அவர்கள் வேதசம்பந்தமாய் எழுதியதெல்லாவற்றையும், திருச்சபையானது பரிசோதித்து ஆராயும்படிக்கு அதற்கு ஒப்புக்கொடுத்து, திருச்சபையால் செய்யப்படும் திருத்தங்களையும், அங்கீகரிப்பையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

2 Peter 1:21

அவர்கள் கர்த்தருக்குத் தேவாராதனை செய்து உபவாசித்து வருகையில், சவுலையும், பர்னபாவையும் நாம் நியமித்து அழைத்த ஊழியத்திற்காக நமக்குப் பிரித்துவிடுங்கள் என்று இஸ்பிரீத்துசாந்து அவர்களுக்குத் திருவுளம்பற்றினார்.

Acts 13:2

ஆகிலும் பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற வரும், பிதாவினிடத்தினின்று புறப் படுகிறவருமாகிய சத்திய இஸ்பிரீத்துவான தேற்றுகிறவர் வரும்போது, அவர் என்னைப்பற்றிச் சாட்சி சொல்லுவார். (லூக். 24:49; அரு. 14:26.)

John 15:26

ஜனங்களெல்லோரும் ஞானஸ்நானம் பெறுகிறபோது சம்பவித்த தேதெனில், சேசுநாதரும் ஞானஸ் நானம் பெற்று ஜெபஞ்செய்கையில், பரமண்டலம் திறக்கப்பட்டு, (மத். 3:13-17; மாற் 1:10; அரு. 1:32-34.)
இஸ்பிரீத்துசாந்துவானவர் தேக வடிவாய் புறாவைப்போல் அவர்மேல் இறங்க, பரலோகத்தினின்று ஓர் குர லொலியும் உண்டாகி: நீரே நமது நேச குமாரன்; உமது பேரில் பிரியமாயிருக்கி றோம் என்று சப்தித்தது. (மத். 3:17; 17:5: லூக். 9:35; 2 இரா. 1:17.)

Luke 3:21-22

நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: நீ எவர்மேல் இஸ்பிரீத்துசாந்து இறங்கிவரவும், தங்கி நிற்கவும் காண்பாயோ, அவரே இஸ்பிரீத்துசாந்துவினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவரென்று, எனக்குத் திருவுளம்பற்றினார். * 33. சேசுநாதர் பிறந்து உலகத்தில் சஞ்சரிக்கிறாரென்று ஸ்நாபக அருளப்பர் தேவஞான திருஷ்டியால் அறிந்திருந்தாலும், சேசுநாதர்சுவாமி தம்மிடத்தில் ஞானஸ்நானம் பெற வந்தபோதுதான் அவரை முதல்விசை தம்முடைய கண்களால் கண்டு அறிந்துகொண்டார்.

John 1:33

இஸ்பிரீத்துசாந்துவினால் உண்டாயிற்று:- இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அர்ச். கன்னிமரியாயின் இரத்தத்தைக்கொண்டு திருக்குழந்தையின் சரீரத்தை அவருடைய நிர்மலமான உதரத்திலே உண்டாக்கினாரேயொழிய அவர் திருக்குழந்தைக்குத் தகப்பனல்ல. ஆதாமின் சரீரத்தை சர்வேசுரன் மண்ணாலே உண்டாக்கினதினாலே ஆதாமுக்கு சர்வேசுரன் உண்டாக்கின தகப்பனே தவிர, பெற்ற தகப்பனாகவில்லை என்பது போலவாம்.

Matthew 1:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |